1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ்..! ஆனால் ஒரு கண்டிஷன்..!

1

தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்சார மினி பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மாற்று எரிசக்தி பேருந்துகளையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குட, சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படவுள்ளது. அதேநேரத்தில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர்,தேனாம்பேட்டை,கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் எவ்வளவு பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை ஆர்டிஓக்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என்றும் இதில் 18 கிலோ மீட்டர் சேவை இல்லாத வழித்தடத்திலும் 8 கிலோமீட்டர் சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலும் அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், அதன்படி ஜூலை 14ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like