1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ஜூன்.1 முதல் 175 சிறப்பு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தொடக்கம்..!

1

தமிழகத்தில் வரும் ஜூன் 6ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளது. இதில் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் அனைத்திலும் தமிழக அரசு மாணவர்கள் நலன் கருதி மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இதனால் பல லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில்  வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1 முதல் இந்த மதிய உணவுத்திட்டம் சிறப்புப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையத்தில் இருந்து இந்த சிறப்புப் பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கு மதிய உணவு, அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்கள் சமூகநலத்துறைக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like