குட் நியூஸ்..! கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க முடிவு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடா்ந்து, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் 3-ஆவது வழித்தடங்களுக்கான பணிகளை மும்முரமாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் செய்து வருகிறது. 119 கி.மீ. நீளத்துக்கு ரூ.69,180 கோடி செலவில் நடைபெறும் இந்தப் பணிகளை 2028-ஆம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனிடையே கூடுதலாக சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரையிலும், பூந்தமல்லி முதல் பரந்தூா் வரையிலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் மெட்ரோ ரயில் சேவையை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பூந்தமல்லி முதல் பரந்தூா் வரை 50 கி.மீ தூரத்திற்கு, கோயம்பேடு முதல் ஆவடி, திருமங்கலம், முகப்போ் வரை 17 கி.மீ தூரத்திற்கு, சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் வரை 26 கி.மீ தூரத்திற்கு என 93 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதற்கான சாத்திய கூறுகளை கண்டறிந்து 2 வாரத்திற்குள் அதற்கான அறிக்கையை சமர்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.