குட் நியூஸ்..! கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் ரத்து!
நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. அதனை தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களையும் சேர்த்து தொடர் விடுமுறை பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்க உள்ளது. இதனால் பலரும் சுற்றுலா பயணங்களை திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி அன்று கொடைக்கானலில் சுற்றுலா தளங்களை காண வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மோர் பாயிண்ட், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை போன்ற சுற்றுலா தளங்களுக்கும் அனுமதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.