குட் நியூஸ்..! இனி சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு - கேரள அரசு அறிவிப்பு!
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம், அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தேவசம்போர்டில் இருந்து ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். பக்தர்களின் வசதிக்காக 14,000 போலீசார் மற்றும் தன்னார்வலர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 70,000 பக்தர்கள் தினசரி அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு தரிசனத்துக்காக தினமும் 10,000 டிக்கெட்டுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பை, எருமேலி, பீர்மேடு ஆகிய இடங்களில் ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்குப் பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.