குட் நியூஸ்..! கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகள் பலரும் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெற குடும்ப தலைவிகள் விண்ணப்பித்த நிலையில், பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் எனவும் விரைவில் புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விண்ணப்ப பதிவு இதுவரை தொடங்காததால், குடும்ப தலைவிகள் பலரும் கவலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில், அதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 15 ஆம் தேதி முதல் மக்களின் குறைகளை போக்க ஸ்டாலின் முகாம் நடைபெறும் என்றும் அப்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிக்கலாம் என கூறினார்.
குடும்பத் தலைவிகள், தங்களது ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, 100 நாள் வேலைத்திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு இ சேவை மையங்கள் மூலமும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.