1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வெறும் ரூ.576 இருந்தால் போதும்: PNG மீட்டர் பொருத்திய கேஸ் கனெக்ஷனை பெறலாம்!

1

இந்தியா முழுக்க பெரும்பாலான மக்கள் இப்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மற்றும் விறகடுப்புகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். சில பேச்சிலர்கள் (Bachelors) மற்றும் வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் (Students) இண்டக்ஷன் ஸ்டவ் (Induction stove) என்ற மின்சார அடுப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான பைப்லைன் கேஸ் இணைப்பை (PNG) மக்கள் பெறுவார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது சிலிண்டர் பயன்பாட்டிற்கு பதிலாக குழாய் மூலம் எரிவாயு இணைக்கும் (Pipeline gas connection - PNG திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக கட்டண சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குழாய் மூலம் நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் தான் PNG எனப்படுகிறது.
எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக பைப்லைன் மூலம் கேஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளன.

சென்னை மற்றும் திருவள்ளுரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு PNG இணைப்பு வழங்கும் வேலைகள் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக இனி மக்கள் நேரடியாக மீட்டர் பொருத்தப்பட்ட குழாய்கள் மூலம் (Pipeline gas meters) தடையில்லா எரிவாயு சேவையை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

எல்பிஜியுடன் ஒப்பிடும்போது PNG சுமார் 20% மலிவானது. அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் இது சிறந்தது என கூறப்படுகிறது. இந்த குழாய் மூலம் நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்ட முயற்சியில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள எல்என்ஜி முனையம் முக்கிய பங்கு வகிக்கிறது. குஜராத், கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் குழாய்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கப்படும் முறை நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளில் சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள சுமார் 33 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு PNG இணைப்புகள் வழங்கப்பட திட்டமிட்டுள்ளது. LPG ரெட்டிகுலேட்டட் இணைப்புகளைப் போலவே PNG யும் செயல்படும். மின்சார ரீடிங் மீட்டர் போன்ற சாதனம் குழாய் மூலம் நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் பயன்பாட்டை கணக்கிட பொருத்தப்படும். இதன் மூலமாக பயன்பாட்டை கணக்கிட்டு ஏற்ற கட்டணம் பயனரிமிருந்து வசூலிக்கப்படும்.

பைப்லைன் கேஸ் இணைப்பிற்கான முன்பதிவிற்கு வெறும் ரூ.576 கட்டணம் செலுத்தினால் போதும். இந்த கட்டணத்தை வசூலித்த 90 நாட்களுக்குள் உரிய கேஸ் இணைப்பு நிறுவனங்கள் PNG இணைப்புகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like