1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி பாமாயிலுக்கு பதிலாக இது கிடைக்கும்!

1

தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன. இதில், கோதுமை மட்டும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. 

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் கூறியிருந்தார். முதற்கட்டமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். இதற்கான பரிசீலனையில் அரசு ஈடுபட்டுள்ளது.

சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதிலாக, அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கலாம் என்று முடிவு செய்துள்ள தமிழக அரசு அதுகுறித்து ரேஷன் கார்டுதாரர்களிடம் கருத்து கேட்டறிய உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like