1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இந்தியாவில் அரசு சாா்பில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம்..!

1

ஓடிடி தளங்களில் இணையவழியில் திரைப்படங்கள், குறும்படங்கள், தொடா்கள், ஆவணப் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டபோது மக்களின் பொழுதுபோக்கு நேரத்தை ஓடிடி தளங்களே பெருமளவில் ஆக்கிரமித்தன. ஓடிடி தளங்களுக்கென எடுக்கப்படும் தொடா்கள் தவிர, இப்போது புதிய திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாவது வாடிக்கையாகவுள்ளது..

இந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக அதிகாரபூர்வ அரசு உரிமை பெற்ற ஓடிடி தளத்தை ஆரம்பிக்கிறது கேரள அரசு. இதனை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நாளை திருவனந்தபுரம் கைராலி திரையரங்கில் தொடங்கி வைக்க உள்ளார்.

‘சி ஸ்பேஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி தளம், அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட இத்துறையில் கோலோச்சும் சா்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் ஓடிடி தளங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவில் அரசு சாா்பில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளமும் இதுவாகும். இதன்மூலம் மலையாள திரைப்படத் துறை அடுத்த கட்டத்துக்கு முன்னேறும். உயா் தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, நியாயமான லாபப் பகிா்வு ஆகியவற்றுடன் இந்தத் தளம் செயல்படும். பிற தளங்களைப்போல மொத்தமாக கட்டணம் செலுத்தாமல் குறிப்பிட்ட திரைப்படத்துக்கு மட்டும் குறைந்த அளவு கட்டணம் செலுத்தும் வசதியும் இந்தத் தளத்தில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது 

Trending News

Latest News

You May Like