குட் நியூஸ்! இந்தியாவின் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்தார்!!

குட் நியூஸ்! இந்தியாவின் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்தார்!!

குட் நியூஸ்! இந்தியாவின் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்தார்!!
X

இந்தியாவின் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்து, தனது பிறந்தநாள் அன்று வீடு திரும்பினார்.

ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றாலும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய் வழியாக மும்பைக்கு வந்த 34 வயதான பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது முதன் முறையாக கண்டறியப்பட்டது.

Corona 5

அந்த பயணியை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த பயணி குணமடைந்ததால், தனது பிறந்தநாளான நேற்று அவர் வீடு திரும்பினார்.

இதனால் மகாராஷ்டிராவின் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடைந்த முதல் நோயாளியும் இவரே என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it