குட் நியூஸ்..! இந்த தேதிக்குள் குடிநீர் வரியை முழுமையாக செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை..!
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியையும், கட்டணங்களையும் அக்டோபர் 30 க்குள் செலுத்துபவர்களுக்கு 5 % ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வரி செலுத்த ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்களும் தலைமை அலுவலகத்தில், இயங்கும் வசூல் மையங்களும் அனைத்து வேலை நாட்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஅத்துடன் வரி மற்றும் கட்டணங்களை காசோலை, வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் காசோலை / வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.