1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ. 6000 நிவாரணம்..!

Q

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. 

மேலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு நேரடியாக ரொக்கப் பணம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. நிவாரண தொகை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பித்தோரின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிச்சாங் புயல் நிவாரணம் வழக்கப்பட உள்ளது.

இது குறித்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கணக்கெடுக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. எனவே தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News

Latest News

You May Like