குட் நியூஸ்..! இனி 2-3 மணி நேரத்தில் திருப்பதியில் சாமி தரிசனம் கிடைக்கும்!
செயற்கை நுண்ணறிவு (AI) எனப்படும் ஸ்மார்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை அனைவரும் எளிதாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை 20-30 மணிநேரத்தில் இருந்து 2-3 மணிநேரமாக குறைக்க இது பயன்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், திருப்பதியில் வசிப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க் கிழமையன்று எளிதாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் வாரியம் தெரிவித்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னபிரசாத வளாகத்தில் தினசரி லட்டு தயாரிப்பில் சுவையான செய்முறையை சேர்க்க வாரியம் முடிவு செய்துள்ளது.