குட் நியூஸ்..! வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய போகிறது..!

இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.
அதன் படி, கடந்த பிப்.5ம் தேதி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருந்தது. கடந்த ஏப்ரல் 9ம் தேதி, ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 06) ரெப்போ வட்டி விகிதத்தை 6%ல் இருந்து 5.5% ஆக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார்.
''ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமையும். வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது'' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.