1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைகிறது..!

Q

ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகளில் வாங்கிய வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறை வாய்ப்புள்ளது. 

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இருமாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான முதல் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தின் கடைசி மற்றும் 3-ம் நாளான இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரையில், 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது .25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like