1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு..!

Q

இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும்.
அதன் படி, கடந்த பிப்.5ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கபட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 09) ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர்.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like