குட் நியூஸ்..! இன்று தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. 2024 – 25 ஆம் கல்வி ஆண்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை வேலை நாட்கள் என்றும் பருவத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்றும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. 365 நாட்களில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசு விடுமுறை, வார விடுமுறை என மொத்தம் 145 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பணிச்சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது தொடர்ந்து ஜூலை 13 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடப்பு மாதத்தில் 10, 24 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம், நான்காம் சனிக்கிழமை விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.