1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி மையம்..!

1

அமைச்சர் கோவி.செழியன் வெளியிடடுள்ள அறிக்கையில்,   தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள், 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் உதவி மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like