1. Home
  2. தமிழ்நாடு

செம நியூஸ்..! புத்தாண்டில் வெளியாக போகும் ஹேப்பி நியூஸ்!

1

மாத சம்பளக்காரர்கள் நமது நாட்டில் அதிகப்படியான வரியை செலுத்துகிறார்கள். இதனாலே ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் நிலவும். கடந்த பட்ஜெட் அறிவிப்பின் போது வருமான வரி உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இதனால் பலரும் எதிர்பார்ப்பில் இருந்தாலும் இது தொடர்பான எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரியை குறைக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இது சம்பந்தமான செய்தியை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி இல்லை. இதனால் மக்கள் மத்தியில் நுகர்வை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலின்படி வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டால் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பலனளிக்கும் என கூறப்பபடுகிறது.

வரிச் சுமையை எதிர்கொள்ளும் நடுத்தர பிரிவினருக்கு அரசின் இந்த முடிவு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். வருமான வரிக்கான உச்ச வரம்பு எந்தளவு குறைக்கப்பட இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை. அரசு இது சம்பந்தமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தேதி நெருங்கும் சமயத்தில் வருமான வரி குறைப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Trending News

Latest News

You May Like