1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்! விரைவில் தமிழகம் முழுவதும் பசுமை பண்ணை தொடங்கப்படும்..!

1

கடந்த மாதம் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிடு, கிடுவென உயர்ந்து 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக ஓட்டல் முதல் வீடு வரை தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுள்ளது. தக்காளி உபயோகம் செய்வதும் குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வுக்கு தீபாவளி உள்ளிட்ட அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில்  தக்காளி, வெங்காயம் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதேபோல் ஆண்டுதோறும் பருவமழை காலம், வெள்ளம், வெயில் போன்ற காரணங்களால் தக்காளி, வெங்காய விலை உயருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 30 முதல் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில்  தக்காளி, வெங்காயம்  கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும் ஒரு கிலோ தக்காளி 49 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தக்காளி, வெங்காயம் ஒரு நபருக்கு அதிகபட்சம், 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. 


இந்நிலையில், சிவகங்கையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தக்காளி, வெங்காயம் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. சென்னையில் பசுமை பண்ணை மூலம் விலை ஏற்றத்தை அரசு தடுத்துள்ளது. 

இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பசுமை பண்ணையை விரிவுபடுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார். கூட்டுறவுச் சங்க தேர்தலை அதற்கான தேர்தல் ஆணையம் தான் நடத்த வேண்டும். தேர்தலை அரசு ஒத்துழைப்பு தான் தர முடியும்” என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like