1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்..!

1

தமிழகத்தில் கிராம சபை கூட்டமானது குடியரசு நாள் (26, ஜனவரி), உலக நீர் நாள் (மார்ச் 22) தொழிலாளர் நாள் (1, மே), சுதந்திர தின நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களின்போது நடைபெறும். தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டமானது கூட்டப்படுகிறது.

இந்தநிலையில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் கூட்டுவது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் சுதந்திர தினத்தன்று காலை 11மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டத்தில், தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்புக் கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கும் படி கூறப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுயசான்று கட்டிட அனுமதி பெறுவதற்கான செயல்முறைகள்,அரசு பொது கட்டடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டங்களில் வரவுச் செலவுக் கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்பாகக் கிராம சபை கூட்டத்தில் ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கும் படி அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like