குட் நியூஸ்..! ரூ.15 லட்சம் வரை கடன் உதவி கொடுக்கும் அரசு.!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு சுயதொழில் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக தனி நபர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், சிறு தொழில் அல்லது வியாபாரம் தொடங்க அல்லது மேம்படுத்த அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவியானது சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவியாக அளிக்கப்படுகிறது. இந்த கடன் உதவியை திரும்ப செலுத்தும் காலம் 3-5 ஆண்டுகள் என நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. வட்டி விகிதம்: ஆண்டுக்கு 6% (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும்).
கடன் பெறுவதற்கான தகுதிகள்:
1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
2. ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம்.
3.வயது : 18 -60
4. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்
தேவைப்படும் ஆவணங்கள்
- சாதி
- வருமானம்
- பிறப்பிடச் சான்றிதழ்.
- குடும்ப அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- ஆதார் அட்டை
விண்ணப்பிக்கும் முறை
- அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள்.
- டாப்செட்கோவின் இணையதளம் www.tabcedco.tn.gov.in
- கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
- மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தொழில் தொடங்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, TABCEDCO-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான tabcedco.tn.gov.in அல்லது அருகிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகவும்.