குட் நியூஸ்..! GST வரியை குறைக்க மத்திய அரசு திட்டம்..!

நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள 56-வது GST கவுன்சில் கூட்டத்தில் 12% GST ஸ்லாப்பை முற்றிலுமாக நீக்கிவிட்டு 5% வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம், நெய், சோப்பு, தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கையானது, அமலுக்கு வந்தால், அது குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நற்செய்தியாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில பொருள்களுக்கான சரக்கு, சேவை வரியின் நிலைகளில் மாற்றம் செய்யப்படலாம். இதன் மூலம் வரிவிகிதம் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும் வாய்ப்புள்ளது.
விகிதம் குறைக்கப்படுவதால் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும். எனினும், ஜிஎஸ்டியின் 56ஆவது கூட்டத்தில்தான் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில மாதங்களில், சில மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன.
எனவே, அதற்கு முன்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைத்து விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாகக் கூறப்படுகிறது.