1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! பத்திரிகையாளர் குடும்ப நிதியை உயர்த்தி அரசாணை..!

Q

செய்தி மக்கள் தொடர்புத்துறை பத்திரிகையாளர் நலன் தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்குதல் வெளியிடப்படுகிறது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து இலட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

அரசின் கவனமான பரிசீலனைக்குப்பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் 

அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாம் பத்து இலட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும். போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- வழங்கப்படும்.

10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக் போது இயற்கை எய்தி விடுவார்களேயான். ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.


 


 

Trending News

Latest News

You May Like