1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! சிஎன்ஜி, எல்என்ஜிக்கு மாறும் அரசு பேருந்துகள்..!

1

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி, எல்என்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதன் தொடா்ச்சியாக சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சென்னை மாநகா், விழுப்புரம் போக்குவரத்துக் கழகங்களின் 4 எல்என்ஜி பேருந்துகள், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 2 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தம் 6 பேருந்துகள் இயக்கும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு சைதாப்பேட்டை - ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் - பூந்தமல்லி, ராமநாதபுரம் -பெரியபட்டினம்-சாயல்குடி இடையே இயக்கப்படும் இந்தப் பேருந்துகளின் இயக்கத்தை சென்னை பல்லவன் சாலையில் உள்ள பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.

சிஎன்ஜி பேருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி பேருந்துகளை இயக்குவதன் மூலம் இந்த செலவு குறைக்கப்படும்.மேலும் இந்த பேருந்துகள் புகையை கக்காது என்பதால் சுறுச்சூழல் பாதுகாக்கப்படும். தற்போது சோதனை முறையில் இயக்கப்படும் இந்த பேருந்துகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்பட்சத்தில் இந்த பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இந்த பேருந்துகளின் சேவை விரிவுப்படுத்தப்படும்.

Trending News

Latest News

You May Like