1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி நந்தனம் அரசு கலைக்கல்லூரி இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றம்!

1

சென்னை நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் முன்பை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்து படித்து வந்தனர். தற்போது நந்தனம் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.  வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருபாலர் பயிலக்கூடிய வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, கல்லூரி தொடங்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த காலங்களில் நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

எனவே, 2024-25-ம் கல்வி ஆண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கிலும், நந்தனம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அதிகளவில் பயன்பெறும் வகையிலும், கல்லூரி ஆட்சிமன்றக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், நந்தனம் அரசு ஆடவர் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றி அதன் பெயரை அரசு கலைக் கல்லூரி, நந்தனம் என்று மாற்றி ஆணை வழங்குமாறு அக்கல்லூரியின் முதல்வர் கோரியிருந்தார். 

இதனையடுத்து, இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தற்போது வரும் கல்வியாண்டு முதல் மாணவிகள் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவார்கள் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே இருந்த அரசு நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி என்ற பெயர் மாற்றப்பட்டு, இனி நந்தனம் அரசு கலைக் கல்லூரி என அழைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like