குட் நியூஸ்..! ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை

இனி தங்கம் விலை ரூ.60,000க்கும் கீழ் குறையவே குறையாது என்ற நிலைக்கு வந்துவிட்டது. வரலாற்றிலேயே முதன்முறையாக பிப் 11ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,000த்தை தாண்டியது.
தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தாலும், மக்கள் எதிர்பார்க்கும் அளவில் குறைய வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறது.
நேற்று (மார்ச் 5-ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,065க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.64,160-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,020-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.1000 உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.360 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.