குட் நியூஸ்..! 2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை..!
தங்கம் விலை எப்போதும் போல் இல்லாமல் நேற்றை போல இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 25) சவரனுக்கு ரூ.ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 45 அதிகரித்து ரூ.9,210-க்கு விற்கப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 10,048 -க்கும், ஒரு சவரன் ரூ. 80,384-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,590-க்கும், ஒரு சவரன் ரூ. 60,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ. 128 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,28,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.