குட் நியூஸ்..! தொடர்ந்து 6-வது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி..!

சமீப காலமாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த வாரம் முழுவதும் குறைந்து கொண்டே வந்தது.
இன்றும் தங்கம் விலை ரூ.120 குறைந்துள்ளது. கடந்த வாரத்தை விட தங்கம் விலை ரூ.2600 வரை குறைந்து விற்பனையாகி வருவதால், நகை வாங்க வேண்டும் என பிளான் வைத்துள்ள மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் இன்று (ஜூன் 30), 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.8,915-க்கும்; சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.71,320-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.119-க்கும்; ஒரு கிலோ ரூ.1,19,000-க்கும் விற்பனையாகி வருகிறது.