குட் நியூஸ்..! தங்கம் விலை 3 நாட்களில் ரூ.1,760 குறைந்தது..!
தங்கம் விலைnகடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 22-ல் தங்கம் விலை ரூ.74,320-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பின்னர், இஸ்ரேல் ஈரான் இடையேயான போரால் ஜூன் 14 ஆம் தேதி ரூ.74,560 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
கடந்த வாரம் முதல் தொடர்ந்து ஏழு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று தொடர்ந்து 3வது நாளாக குறைந்துள்ளது.
நேற்று (ஜூலை 25) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,210க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஒரு சவரன் ரூ.73,680க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,280க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் நேற்று ரூ.9,210க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.50 குறைந்து ரூ.9,160க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.128க்கும், கிலோ ரூ.1,28,000க்கும் விற்கப்படுகிறது.
தங்கம் 3 நாட்களில் ரூ.1,760 குறைந்துள்ளது.