குட் நியூஸ்..! தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது..!
தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.95-ம், பவுனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தங்கம் விலை ரூ.75 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்து, இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் என்ற இலக்கையும் எட்டி பிடித்து இருந்தது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.280-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு பவுன் ரூ.74,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.9,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.128-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது