குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு 56 ஆயிரம் கீழ் குறைந்தது..!
எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அந்த அளவுக்கு குறைந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில், தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் காணப்பட்டு நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 55,560 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,945 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதாவது தங்கம் விலை ரூ 56 ஆயிரத்திற்கு கீழும் வெள்ளியின் விலை ரூ 100க்கு கீழும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இன்று நவம்பர் 16 ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்துள்ளது. இதனால் சவரன் ரூ 55,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 6,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 99-க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,560
14-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480
13-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,360
12-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,680
11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760