குட் நியூஸ்..! சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது..!
(அக் 01) காலை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் அதிகரித்து , 10,890 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 87,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் அதிகரித்து, 10,950 ரூபாய்க்கும், சவரனுக்கு, 480 உயர்ந்து, 87,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 02) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.10,880க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஒரே நாளில் இரண்டு முறை உயர்வை கண்டது. இந்த சூழலில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது.
.png)