குட் நியூஸ்..! ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்த தங்கம் விலை.!
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து அனைவருக்கும் ‘ஷாக்' கொடுத்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று அதிகரித்த தங்கம் விலை இன்று காலை சரிந்தது. இன்று காலையில் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840-க்கும், சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.93,920க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, 11,740க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.