குட் நியூஸ்..! 10 நாட்களில் சவரனுக்கு ரூ.2280 சரிந்த தங்கம் விலை..!
இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை பெரும்பாலும் இறங்குமுகத்தில் இருப்பதையே பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த 6-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதன் எதிரொலியாக அதற்கு மறுநாள் (7-ந் தேதி) சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.
கடந்த மாதம் 31-ந் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், விலை குறைந்ததால் கடந்த 7-ந் தேதி ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
கடந்த 8-ந் தேதி சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, மீண்டும் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அதனைத்தொடர்ந்து விலை குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.135-ம், சவரனுக்கு ரூ.1,080-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 85-க்கும், ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,280 சரிந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு மீண்டும் நேற்று ரூ.57 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,680
11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760
10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
09-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280