1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! 3 நாட்களில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை..!

Q

கடந்த மாதம் 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. ஜன.31-ம் தேதி ஒரு பவுன் ஆபணத்தங்கம் ரூ.61 ஆயிரத்தையும், பிப்.1-ம் தேதி ரூ.62 ஆயிரத்தையும் தாண்டியது. நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டுவந்தது.
அதிலும், பிப்.11-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,480 ஆகவும், பிப்.20-ம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது. இதன் பிறகு, சற்று விலை குறைந்தாலும், பிப்.25-ம் தேதி பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை பதவு செய்து வந்தது. இருப்பினும், மறுநாள் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் விலை ரூ.69,904-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் உள்ளது.
அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.54 குறைந்து ரூ.8,684 ஆகவும், சவரன் விலை ரூ.432 குறைந்து ரூ.69,472 ஆகவும் உள்ளது.
இதனிடையே, 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.105 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,05,000 ஆகவும் விற்பனை ஆகிறது. 
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

Trending News

Latest News

You May Like