குட் நியூஸ்..! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.880 குறைந்த தங்கம் விலை..!
கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது.
டிச., 18ம் தேதி சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்தது. அதன் படி ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.7,135க்கும், சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (டிச.,19) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு, 520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 56,560 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.7,070க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (டிச.,20) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.56,320க்கும், ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.7,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில், சவரனுக்கு ரூ. 880 குறைந்துள்ளது.