குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு 360 குறைவு..!
தங்கம் விலை சில நாட்களாக சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், சனிக் கிழமை (ஜூலை 12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து விற்பனையானது.(ஜூலை 14) தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.73,240க்கும், கிராம் ரூ.9,115-க்கும் விற்பனையான நிலையில், நேற்று (ஜூலை15) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.9,145-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை கிராமுக்கு 45 ருபாய் குறைந்து அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இன்று (ஜூலை16) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.9,100-க்கு விற்கப்படுகிறது.
