1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! ரூ.92 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை..!!

1

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் நேற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,460-க்கும், ஒரு சவரன் ரூ.91,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ. 4 குறைந்து ஒரு கிராம் ரூ.169-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

21.11.2025 ஒரு சவரன் ரூ.91,680 (இன்று)

20.11.2025 ஒரு சவரன் ரூ.92,000 (நேற்று)

19.11.2025 ஒரு சவரன் ரூ.92,800

18.11.2025 ஒரு சவரன் ரூ.91,200

17.11.2025 ஒரு சவரன் ரூ.92,320

16.11.2025 ஒரு சவரன் ரூ.92,400

Trending News

Latest News

You May Like