குட் நியூஸ்..! 2 நாளில் ரூ.1760 குறைந்த தங்கம் விலை...!
இந்தாண்டு இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது.
கிட்டதிட்ட சவரன் ரூ.60,000-ஐ நெருங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.55,000 வரை விற்பனை ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென விலை கடுமையாக உயர்ந்தது. 5 நாளில் ரூ.2,320 அதிகரித்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080 க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.960 குறைந்து ரூ.56,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 98-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.