1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் ஜெமினி ஏ.ஐ. செயலி அறிமுகம்..!

1

இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஒன்பது ஜெமினி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

இது குறித்து கூகுளின் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளில் ஜெமினி செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். உள்ளூர் மொழிகளையும், பல புதிய அம்சங்களையும் சேர்த்து, ஜெமினி அட்வான்ஸ்டு மற்றும் ஆங்கிலத்தில் கூகுள் மெசேஜில் ஜெமினியை அறிமுகப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார். 

ஜெமினி ஏ.ஐ. செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். கணிதம், இயற்பியல், வரலாறு, மருத்துவம் என 57 பாடங்களின் சந்தேகங்களுக்கு தீர்வை கொடுக்கும். ஜெமினி ஏ.ஐ., செயலியால் கோடிங் எழுதவும் முடியும். ஏற்கனவே, துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like