1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! சென்னையில் இருந்து அயோத்திக்கு பிப். 1-ல் முதல் புதிய விமான சேவை..!

1

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.  லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னையிலிருந்து அயோத்திக்கு புதிய விமான சேவை துவங்கப்பட உள்ளது. 

அதன்படி பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த சேவையை தொடங்க உள்ள நிலையில்,  பிப்ரவரி 1-ம் தேதி காலை 12.40 மணிக்கு முதல் விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து அயோத்தி நோக்கி புறப்படுகிறது. 

தொடர்ந்து 6.20 மணிக்கு அயோத்தியில் இருந்து சென்னை நோக்கி வரும் விமானம் புறப்பட உள்ளது. அதே நேரத்தில் தினம்தோறும் சென்னையில் இருந்து அயோத்திக்கு ஒரு சேவையும் அயோத்தியில் இருந்து சென்னைக்கு ஒரு சேவையும் வழங்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like