குட் நியூஸ்..! நாளை முதல் இலவசமாக நீர் மோர்..!

கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கோயிலுக்குள் கருங்கல் பதிக்கப்பட்ட பகுதிகளில் தரைவிரிப்பு போடப்படும் என்றும்,நீர் மோர் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
வெயில் காலம் என்பதால் கோயில்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் நலன்கருதி நீர் மோர் பந்தல், மேட் தரை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட உள்ளது. மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர் என்பதால் தான் வெளியின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கோயிலுக்குள் கருங்கல் பதித்த தரை உள்ள இடங்களில் தரை விரிப்பு அமைக்கப்படும்.
உலகம் முருகன் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் அல்லது ஜூலையில் பழனியின் முருக பகதர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது இவ்வாறு கூறினார்.