1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! நான் முதல்வன் திட்டம் மூலம் 1000 பேருக்கு இலவச பயிற்சி அறிவிப்பு!

1

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் 2024-2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக "நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப்பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை'' துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14.07.2024 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, 08.06.2024 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2024 ஆகும்’ என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Naan Mudhalvan நுழைவுத் தேர்வு விவரங்கள் :

  • நான் முதல்வன் திட்டம் மூலம் 1000 தேர்வர்களுக்கு இலவசமாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள், வங்கி தேர்வுகள் மற்றும் ரயில்வே பணிக்களுக்கான தேர்வுகள் ஆகியவற்றிக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். எஸ்.எஸ்.சி மற்றும் வங்கி பணிகள் தேர்விற்கு 300 பேர் மற்றும் வங்கி பணிகள் தேர்விற்கு 700 பேர் தேர்வு செய்யப்படுவர்.
  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதக் காலம் முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.
  • பயிற்சி காலத்தில் மாணவர்கள் தங்குவதற்கான இடம், உணவு மற்றும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
Naan Mudhalvan திட்டத்தில் பயிற்சி பெற கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • எஸ்எஸ்சி, வங்கி மற்றும் ரயில்வே பணி பயிற்சிக்கு குறைந்தது 21 வயது முதல் 29 வயது வரை இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு உண்டு.
Naan Mudhalvan திட்டத்தில் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி..?
நுழைவுத் தேர்விற்கு https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 38 மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.

Naan Mudhalvan திட்ட நுழைவுத் தேர்விற்கான முக்கிய நாட்கள் :
விவரம் முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 23.06.2024
ஹால் டிக்கெட் வெளியாகும் நாள் 09.07.2024
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் 14.07.2024

நான் முதல்வன் திட்டத்தில் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இலவசமாக பயிற்சி பெறலாம்.

Trending News

Latest News

You May Like