1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் வேலூர் - சென்னை இடையே விமான சேவை.. !

1

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. 

இந்நிலையில்  ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளதாவது ,“வேலூர் – சென்னை இடையே விமான சேவைக்கு உரிமம் கிடைத்தவுடன் விமானம் இயக்கப்பட உள்ளது. உதான் திட்டம் மூலம் வேலூர்-சென்னை இடையே விரைவில் விமான சேவை இயக்கப்பட உள்ளது.உதான் திட்டம் சேலம், வேலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது” என அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like