1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6000 நிதியுதவியை ரூ.8000 ஆக உயர்த்த திட்டம்..!

1

பிப்ரவரி 24, 2019 அன்று, பிஎம்-கிசான் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குறிப்பிட்ட வருமான அடிப்படையிலான விலக்கு அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியான விவசாயிகளின் குடும்பங்கள் ஆண்டுதோறும் ரூ. 6,000 பெறுகின்றன, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் மூன்று தவணைகளில் நேரடி பயன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும்.

நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இது வரை மொத்தமாக ரூ.3.04 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர்; இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.3.24 லட்சம் கோடியைத் தாண்டும். உண்மையில், மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடியின் முதல் முடிவு, தகுதியான விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் 17வது தவணையை வழங்குவதாகும்.

இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்த விவசாயத் துறை நிபுணர்கள், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை வரும் ஜூலை 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது வரி செலுத்துவோர், பெண்கள் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் பல சலுகைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் வழங்கப்படும் தொகையையும் உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.6,000 இல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Trending News

Latest News

You May Like