குட் நியூஸ்..! அகஸ்தியர் அருவிக்கான கட்டணம் குறைப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் கொட்டும் பாபநாசம் அகத்தியர் அருவி, பயணிகளை கவர்ந்திழுக்கும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. சுற்றுலா மற்றும் ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த அகத்தியர் அருவிக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த அகத்தியர் அருவி. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் வரை பேருந்து வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அம்பாசமுத்திரம் வரை ரயில் வசதியும் உண்டு. அதன்பின்பு பாபநாசம் சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது தனியார் வாகனங்களில் அகத்தியர் அருவிக்கு செல்லலாம். அகத்தியர் அருவிக்கு சென்றால் வனத்துறை அறிவிக்கப்பட்டிருந்த கட்டணத்தை செலுத்தி விட்டு குளிக்க செல்லலாம். இங்கு அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனி தனி இட வசதி உண்டு. அகத்தியர் அருவியில் குரங்கு பட்டாளங்கள் அதிகம் உண்டு அவற்றைக் கண்டு களித்தபடி அவற்றுடன் விளையாடியபடி சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடலாம். அகத்தியர் அருவிக்கு அருகில் சிறிது தூரத்தில் ஒரு படிக்கட்டு செல்லும் அந்தப் படிக்கட்டின் மேலே பயணித்தால் கல்யாணி தீர்த்த அருவியை பார்க்கலாம். ஆனால் அங்கு குளிக்க அனுமதி கிடையாது. அங்கு சென்று அங்கு இருக்கும் இறைவனை தரிசித்து விட்டு அருவியை கண்களால் கண்டு ரசித்து விட்டு வரலாம்.
இந்நிலையில் நெல்லையில் உள்ள அகஸ்தியர் அருவிக்குச் செல்வதற்கான கட்டணத்தை ₹30ல் இருந்து ₹20-ஆக குறைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
₹30-ஆக இருந்த கட்டணத்தை ₹40-ஆக உயர்த்தியதால் அதனை குறைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி முதலமைச்சர் கட்டணத்தை குறைக்கச் சொல்லி எங்களுக்கு ஆணையிட்டுள்ளார் என வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்