குட் நியூஸ்! இந்த எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் 1 மாதத்திற்கு நீட்டிப்பு..!
பயண கட்டணம், நேரம், வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான பொதுமக்கள் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கும் உள் மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படும் ரயில்களில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது கோடை காலத்தை முன்னிட்டு தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கீழ்கண்ட சிறப்பு ரயில்களின் சேவை நீடிக்கப்பட்டுள்ளது.
1.ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண். 06012/ 06013 நாகர்கோவில்-தாம்பரம்- நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் 5.5.2024 முதல் 26.5. 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2.வண்டி எண். 06011 தாம்பரம் நாகர்கோவில் வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் மே 6ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3,வண்டி எண். 06043 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- கொச்சுவேலி இடையே புதன்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு எக்ஸ்ப்ரஸ் ரயில் மே 1 முதல் மே 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4.வண்டி எண். 06044 கொச்சுவேலி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் மே இரண்டாம் தேதி முதல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. வண்டி எண். 06019 நாகர்கோவில்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மே ஐந்தாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
6.மறு மார்க்கத்தில் வண்டி எண். 06020 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் மே 6ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
7.ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண். 06021 நாகர்கோவில் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் மே 12ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
8.மறு மார்க்கத்தில் வண்டி எண். 06022 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் திங்கட்கிழமைகளில் மே 13ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது