குட் நியூஸ்..! அவசரகால மீட்பு வாகனம் ‘வீரா’ அறிமுகம்..!

சாலை விபத்தில் சிக்கியவர்களை சேதமடைந்த வாகனங்களில் இருந்து மீட்க உதவும் ‘வீரா’ எனும் அவசரகால வாகனத்தின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் கொடி அசைத்து அந்த வாகனச் சேவையைத் தொடங்கி வைத்தார்.
சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டத்தின் ஓர் அங்கமாக சென்னைப் போக்குவரத்துக் காவல்துறைக்காக இந்த மீட்பு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி இந்தியாவில் முதல்முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஹூண்டாய் குளோவிஸ்’, ‘இசுசூ மோட்டார்ஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் நிபுணத்துவப் பங்களிப்பை அளித்துள்ளன.