குட் நியூஸ்..! இன்று முதல் சென்னையில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்..!
இன்று முதல் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் ரயில்வே பணிமனை மற்றும் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தாம்பரம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் 10 முதல் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படும்.
இதுதவிர கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரத்தில் இருந்து சிறப்பு மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2 வாரங்களாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 15-ம் தேதி முதல் நேற்று வரை மின்சார ரெயில்கள் மட்டுமின்றி விரைவு ரயில்களும், தாம்பரத்தில் நிற்கவில்லை. இந்த நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்ததால் இன்று (19-ம் தேதி) முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.